சட்னி வகைகள்

காசினி கீரை சட்னி

மருத்துவ குணம் மிகுந்த காசினி கீரையில், சட்னி தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-

காசினி கீரை- 2 கோப்பை அளவு,
பச்சை மிளகாய்- 5 எண்ணிக்கை,
கறிவேப்பிலை- சிறிதளவு,
பூண்டு, வெங்காயம்- தலா ஒன்று,
உப்பு- தேவையான அளவு,
அரைத்த தேங்காய்- 3 ஸ்பூன்

தாளிப்பதற்கு

கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி, எண்ணெய்- சிறிதளவு.

செய்முறை:-

• மிளகாய், வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு, பூண்டையும் தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

• காசினி கீரையை அம்மியில் நன்றாக அரைத்துக் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

• கீரை கொதி நிலைக்கு வந்த பின்னர், பூண்டு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை அதில் போட வேண்டும்.

• சிறிது நேரம் கழித்து, தேங்காய் விழுதை கீரையில் கொட்டி, நன்றாக கிளற வேண்டும்.

• கடைசியாக தாளிக்கும் பொருட்களுடன், கறிவேப்பிலையும் போட்டு தாளித்து, அதை கீரையுடன் சேர்க்க கிளறி இறக்க வேண்டும்.

• இப்போது காசினி கீரை சட்னி தயார் ஆகிவிடும். இதை இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

1520f9b1 540d 4d2f b170 a3edc6c6274c S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button