​பொதுவானவை

சத்து நிறைந்த பச்சை பயறு சுண்டல்

பச்சை பயறு சுண்டல் தயாரிக்க தேவையான பொருட்கள் வருமாறு:-

பச்சை பயறு- 1 கப்,
எண்ணெய் – 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை சிறிதளவு,
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி,
கடுகு ½ தேக்கரண்டி,
பச்சை மிளகாய் – 2 எண்ணிக்கை,
வெங்காயம் சிறிதளவு,
உப்பு ½ தேக்கரண்டி,
உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சிறிதளவு.

செய்முறை:-

• பச்சை பயிற்றை 1½ கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதில் இருந்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பயிற்றை 2 கப் தண்ணீரில் தேவையான உப்பு சேர்த்து, 20 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

• கடாயில் அடுப்பில் ஊற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை பொரித்து கூடவே பெருங்காயத்தையும் சேர்க்க வேண்டும்.

• அவற்றை வேகவைத்த பச்சை பயிற்றுடன் சேர்த்து, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் ஆகியவற்றையும் சேர்த்து, இன்னும் சில நிமிட நேரம் வேக வைக்க வேண்டும்.

• இப்போது, பச்சை பயறு சுண்டல் தயார் ஆகிவிடும்.

• உடலுக்கு மிகவும் தெம்பு தரக்கூடிய உணவு இதுவாகும்.

f2ce295c 4061 4e49 a7d3 f2bfcd2e95ef S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button