சைவம்

கத்திரிக்காய் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 8-10 (நறுக்கியது) சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 5 பற்கள் துருவிய தேங்காய் – 1/4 கப் புளி – 1 சிறு எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை தண்ணீர் – 1 கப் உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 3/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் வடகம் – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து, அதில் கத்திரிக்காயை சேர்த்து, கத்திரிக்காய் சுருங்கும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், புளிச்சாற்றினை ஊற்றி, கத்திரிக்காய் மென்மையாக வெந்ததும், குழம்பை நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, குழம்புடன் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, குழம்பு சற்று கெட்டியாகி, எண்ணெய் பிரியும் போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்போது சுவையான கத்திரிக்காய் புளிக்குழம்பு ரெடி!!!
21140 420593998119015 904941341490924064 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button