அசைவ வகைகள்

முட்டை குழம்பு

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* ஏலக்காய் – 4

* பிரியாணி இலை – 1

* கல்பாசி – 2 துண்டு

* வரமிளகாய் – 2

* வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* சிக்கன் ஸ்டாக் க்யூப் – 1

* முட்டை – 4-5 (வேக வைத்தது)

* கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”nothattukadaimuttaikuzhambu” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, கல்பாசி, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக 2 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை வேக வையுங்கள்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, சிறிது நீரை ஊற்றி, சிக்கன் ஸ்டாக் க்யூப் சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக வெட்டி சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தட்டுக்கடை முட்டை குழம்பு தயார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button