மருத்துவ குறிப்பு

ஜிகா வைரஸ் ஓர் எச்சரிக்கை!

மலேரியா, சிக்குன்குனியா, எபோல வரிசையில் இப்போழுது மனிதனை காவு வாங்க வந்திருக்கிறது ஜிகா வைரஸ்.தென் அமெரிக்கா நாடுகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் முக்கியமாக வரும் ஜுன் மாதம் ஒலிம்பிக்ஸ் நடக்கும் பிரேசில் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

தோற்றம்

உகாண்டாவிலுள்ள ஜிகா காடுகளில் தான் முதன்முதலாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அதனால் ‘ஜிகா’ என பெயர். HIV வைரஸ் போன்று இதுவும் குரங்குகளில் தான் உருப்பெற்றது.பின் கொசுகளிடம் பரவி இப்பொழுது மனிதர்களிடம் வேகமாக பரவி வருகிறது.1947ல் உகாண்டாவில் தோன்றிய இந்த கொடிய நோயானது 1977ல் பாகிஸ்தானை தாக்கியது.மலேசியா இந்தோனேசியா போன்ற நாடுகளும் அப்பொழுது பாதிக்கப்பட்டது.

பரவும் வழிகள்

>> >> டெங்கு, சிக்குன்குனியா பரப்பிய அதே ஏடிஸ் (AEDES) கொசுகளே ஸிகாவையும் பரப்பிகிறது.இந்த கொசுக்கள் பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்கும்.

>> >>உடலுறவு மூலமும் பரவும் இந்த ஸிகா.ஓர் உயிரியலாளர் ஜிகாவை பரப்பும் கொசுகளை பற்றி படிப்பதற்காக செனிகல் சென்றுள்ளார்.அங்கு அவரை ஏடிஸ் (AEDES) கொசுகள் கடித்துள்ளன. அமெரிக்கா திரும்பிய அவர் சில நாட்கள் நோய் வாய்ப்பட்டுள்ளார்.தனது மனைவியுடன் கொண்ட உடலுறவால் அவர் மனைவியும் நோய் வாய்ப்பட்டார்.அந்த உயிரியலாளர் மற்றும் அவரது மனைவியின் இரத்தப் பரிசோதனையில் இது உறுதி செய்யப் பட்டது.

>> >>பிரேசில் போன்ற நாடுகளில் விபசாரம் தடை செய்ய படவில்லை.ஆதலால் தென் அமெரிக்கா நாடுகளில் இது வேகமாக பரவி வருகிறது.மேலும் ஜுன் – ஜுலை மாதங்களில் பிரேசலில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருப்பதால் ஜிகா மிக பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

>> >> கர்ப்பிணிப் பெண்களையும் இது விட்டு வைப்பதில்லை. ஜிகா நோய்யுள்ள இடங்களுக்கு கர்ப்பிணிப் பெண்கள் செல்லும் பொழுது தாயை மட்டுமின்றி வயற்றிலுள்ள குழந்தையையும் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கும் போது, கருவின் மூளை வளர்ச்சியை இது தடுக்கும்.

அறிகுறிகள்

>> >>லேசான தலைவலி,
>> >>கண் வலி,
>> >>தலைவலி
இந்த மாதிரி அறிகுறிகள் 2-7 நாட்கள் வரை நீடிக்கும்.

தடுக்கும் முறை

இதுவரை ஜிகா வை தடுக்க மருந்துகள் கண்டுப்பிடிக்கவில்லை.அதிகமான தண்ணீர் அருந்துவது,கொசுகளை தடுப்பது,தண்ணீர்களில் கொசுகளை அண்டவிடாமல் இருப்பது எல்லாம் சில முன் எச்சரிக்கைகள்.

பாதிக்கப்பட்ட நாடுகள்

ஜிகா அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள்
>> >>பிரேசில்
>> >>பார்பாடோஸ்
>> >>போலிவியா
>> >>கொலம்பியா
>> >>ஈக்வேடார்
>> >>எல் சால்வாடர்
>> >>பிரான்ஸ் கயானா
>> >>குவாடேமாலா
>> >>கயானா
>> >>ஹாட்டி
>> >>மேக்ஸ்கோ
>> >>பானாமா
>> >>பாராகுவே
>> >>சயாண்ட் மார்ட்டின்
>> >>வெனிசுலா
zikavvirums1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button