சிற்றுண்டி வகைகள்

சாக்லேட் கேக் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

வெண்ணெய் – 150 கிராம்
சீனி – 200 கிராம்
மைதா – 250 கிராம்
முட்டை – 3
பேக்கிங் பவுடர் – 1 மேசைக்கரண்டி
கொதி நீர் – அரை கப்
கோக்கோ பவுடர் – 2 மேசைக்கரண்டி

செய்முறை :

* கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கவும்.

* மைதாவையும், பேக்கிங் பவுடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், பொடித்த சீனியையும் போட்டு நன்கு மிருதுவான அடித்துக் கொள்ளவும்.

* பின் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடிக்கவும்.

* அடுத்து மைதா கலவையையும், கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே கைவிடாமல் கட்டி இல்லாமல் அடிக்கவும்.

* பின்னர் கேக் செய்யும் அதாவது கனமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவவும். இப்படி செய்தால் கேக் ஒட்டாமல் வரும்.

* இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் பாதியளவு வரும்படி ஊற்றவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் வெந்தவுடன் மேலே எழும்பி வரும்.

* மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி C-யில்25 -35 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.

* கேக் நன்கு வெந்ததும் அவனில் இருந்து எடுத்து துண்டங்கள் போடவும்.

* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கேக் ரெடி.201omemade christmas chocolate cake SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button