26.8 C
Chennai
Wednesday, Jan 15, 2025
picture5 14 1481703201
கேக் செய்முறைசிற்றுண்டி வகைகள்

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

தேவையான பொருட்கள்:

1. சாக்லேட் கேக் – 1 2. அடிக்கப்பட்ட கிரீம் – 4 கப் 3. டின் செர்ரிக்கள் – 16 (பகுதிகளாக வெட்டப்பட்டது) சக்கரை பாகிற்கு 4. சர்க்கரை – ½ கப் 5. தண்ணீர் – ¾ கப் அழகுப்படுத்துவதற்காக 6. சாக்லேட் சுருள் – 1¼ கப் 7. டின் செர்ரிக்கள் – 10 (முழுமையானது)

செயல்முறை: 1. ஒரு சாக்லேட் கேக்கை அருகில் உள்ள பேக்கரியில் இருந்து வாங்குங்கள். இது எளிதாக கிடைக்கின்றது. மேலும் இதில் முட்டை கிடையாது. இந்த சாக்லேட் கேக்கை 3 அடுக்குகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது, நீங்கள் கேக்கை ஊற வைக்க சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நீர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். தண்ணீரில் சக்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.

2. பாகிற்கு சுவை சேர்க்க நீங்கள் பிராந்தி, ரம், முதலியனவற்றை சிறிது சேர்க்கலாம். பாகு நன்கு கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். சர்க்கரை பாகு அறை வெப்பநிலைக்கு வரும் வரை பாகை குளிர விடவும். இப்போது, ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் அடிக்கப்பட்ட க்ரீமை சேர்த்து நன்கு அடிக்கவும். க்ரீம் பொங்கி பஞ்சு போன்று வரும் வரை க்ரீமை நன்கு அடித்து கலக்கவும்.

3. ஒரு கேக் ஸ்டேண்ட் எடுத்து அதில் ஒரு அடுக்கு கேக் வைக்கவும். இப்போது, அதில் சர்க்கரை பாகு சேர்க்க வேண்டும். மேலும் அதில் அடிக்கப்பட்ட க்ரீமை சேர்த்து ஒரு அடுக்கு போன்று செய்யவும்.

4. கேக் அடுக்குகளின் மீது தடித்த கிரீம் அடுக்குகளை உருவாக்கவும். மிகவும் கவனமாக கேக்குகளின் மீது க்ரீம் நன்கு பரவும் படி தடவவும். இப்போது, கேக் அடுக்குகளின் மீது செர்ரிகளை சேர்க்க வேண்டும். நீங்கள் முழு செர்ரிகள் அல்லது பாதியாக வெட்டப்பட்ட செர்ரிக்களை பயன்படுத்தலாம்.

5. இப்பொழுது முதல் கேக் அடுக்கின் மீது இரண்டாவது கேக் அடுக்கை உருவாக்கவும். மேலே குறிப்பிடப்பட்ட செய்முறைகளை மீண்டும் பின்பற்றவும். இதே போன்று மூன்றாவது மற்றும் கடைசி அடுக்கை உருவாக்கவும். அதன் பின்னர், கேக் முழுவதும் பரவும் படி கிரீமை முழுமையாக பரப்பவும். க்ரீம்களை நன்கு சமன்செய்யவும். சாக்லேட் பட்டையை துருவி அதில் இருந்து சாக்லேட் சுருளை உருவாக்குங்கள். அதை வைத்து கேக்கை அலங்கரியுங்கள் மேலும் கேக்கை அலங்கரிக்க செர்ரிக்களை பயன்படுத்தலாம்.

6. இந்த கேக்கின் பக்கவாட்டில் சாக்லேட் சுருள்களை தடவ மறவாதீர்கள். இப்பொழுது உங்களுடைய வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிளாக் ஃபாரஸ்ட் கேக் தயார்.

7. பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை சிறிய பகுதிகளாக வெட்டி உங்களின் விருந்தினர்களுக்கு பறிமாறுங்கள்.

picture5 14 1481703201

Related posts

க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கட்டை எவ்வாறு தயாரிப்பது? (வீடியோ இணைப்புடன்)

nathan

குபூஸ்(அரேபியன் ரொட்டி)

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் தினையரிசி சோமாசி

nathan

சுவையான சத்தான கம்பு புட்டு

nathan

வெஜிடபிள் கோதுமை ரவா உப்புமா

nathan

இலை அடை

nathan

வாழைப்பூ பச்சடி

nathan

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ்

nathan

குதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி?

nathan