prawncurry 1645270012
சமையல் குறிப்புகள்

சுவையான செட்டிநாடு இறால் குழம்பு

தேவையான பொருட்கள்:

* இறால் – 500 கிராம் (சுத்தம் செய்தது)

வறுத்து அரைப்பதற்கு…

* மல்லி – 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 2-3

* சோம்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* ஓமம் – 1/2 டீஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* மிளகு – 1 டீஸ்பூன்

* கிராம்பு – 4

* ஏலக்காய் – 4

* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

* கசகசா – 1 டேபிள் ஸ்பூன்

குழம்பிற்கு…

* எண்ணெய் – 1/4 கப்

* கடுகு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – 1 கையளவு

* சின்ன வெங்காயம் – 20 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

prawncurry 1645270012

செய்முறை:

* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த பொடியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த மசாலா பொடிகளை சேர்த்து, அத்துடன் அரைத்த மசாலா பொடியையும் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக கழுவிய இறாலை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு இறால் குழம்பு தயார்.

Related posts

பிரட் பாயாசம்

nathan

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…

nathan

சூப்பரான பேபி கார்ன் மஞ்சூரியன்

nathan

சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி

nathan

சுவையான சிக்கன் டிக்கா மசாலா

nathan

முந்திரி சிக்கன்

nathan

சுவையான பனீர் டிக்கா! தயார் செய்வது எப்படி?

nathan

பீன்ஸ் புளிக்குழம்பு

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan