இனிப்பு வகைகள்

சுவையான ரவா பணியாரம்

தேவையான பொருட்கள்:

* ரவா – 1/2 கப்

* தண்ணீர் – 1/2 கப்

* பொடித்த வெல்லம் – 1/2 கப்

* மைதா – 1/4 கப்

* கோதுமை மாவு – 1/4 கப்

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் ரவையை எடுத்து, அதில் அரை கப் நீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் வெல்லத்தை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் மைதா மற்றும் கோதுமை மாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அதன் பின் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

* இதேப்போன்று அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான ரவா பணியாரம் தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button