ஆரோக்கிய உணவு

எலும்பை பலவீனப்படுத்தும் உணவுகள்

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதற்கு கால்சியம் சத்துக்கள் அவசியம். ஆனால் நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகளால் அந்த கால்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போகிறது. இது நீடித்தால், பின் எலும்புகளின் அடர்த்தி குறைந்து பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.

* உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் கால்சியத்தின் அளவு குறையும். ஏனெனில் அதிகப்படியான சோடியம் உடலில் இருந்து அதிகப்படியான அளவில் கால்சியத்தை சிறுநீரகங்களின் வழியே வெளியேற்றும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க ஒரு நாளைக்கு 1,500 மிகி (1/2 டீஸ்பூன்) அல்லது அதற்கும் குறைவான அளவில் சோடியத்தை எடுத்து வாருங்கள் மற்றும் குறைந்தது 1,200 மிகி கால்சியத்தையும் தவறாமல் எடுத்து வாருங்கள். குறிப்பாக வயது அதிகரிக்கும் போது உப்பின் அளவைக் குறைத்து வந்தால் தான் எலும்பு பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

* ஒரு வாரத்தில் 7-க்கும் அதிகமான அளவில் சோடா பானங்களைப் பருகினால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஏனெனில் கோலாவில் உள்ள பாஸ்பாரிக் அமிலம், உடல் கால்சியத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்துவதோடு, குடலையும் பலவீனமாக்கும். எனவே சோடா பானங்களைப் பருகுவதைத் தவிர்த்து, பழச்சாறுகளைப் பருக ஆரம்பியுங்கள்.

* காபி, டீ போன்ற பானங்களை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் காபி, டீயில் உள்ள காப்ஃபைன் எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்றி, வலிமையை இழக்கச் செய்யும். அதிலும் ஒருமுறை நீங்கள் 100 மிகி காப்ஃபைன் எடுத்தால், 6 மிகி கால்சியம் எலும்புகளில் இருந்து வெளியேற்றும்.

* அதிகப்படியான ஆல்கஹால் எலும்புகளின அடர்த்தி மற்றும் எலும்புகள் உருவாக்கத்தைக் குறைத்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயத்தை உண்டாக்கும். எனவே ஆல்கஹால் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

* தக்காளி, காளான், கத்திரிக்காய், வெள்ளை உருளைக்கிழங்கு போன்றவை எலும்பு அழற்சியை ஏற்படுத்தி, நாளடைவில் ஆஸ்டியோபோரோசிஸிற்கு வழிவகுக்கும். ஆனால் இவற்றில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின்களும், இதர ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளதால், இதனை உண்பதை முற்றிலும் தவிர்க்காமல், அளவாக உட்கொண்டு வாருங்கள். குறிப்பாக தினமும் தவறாமல் 1,200 மிகி கால்சியத்தை எடுத்து வாருங்கள்.

* பசலைக்கீரையில் கால்சியம் ஏராளமாக இருந்தாலும், இவற்றைப் பச்சையாக உட்கொண்டால், அதில் உள்ள ஆக்ஸலேட்டுகள் கால்சியம் உறிஞ்சுவதைத் தடுக்கும். எனவே இவற்றை பச்சையாக உட்கொள்ளாதீர்கள்.
ee2fe156 581a 4ce5 a6c3 179366a38e51 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button