மருத்துவ குறிப்பு

புரோஸ்திரேட் வீக்கம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்

புரோஸ்திரேட் சுரப்பி வீங்குவதற்கோ, பெரிதாவதற்கோ வயோதிகம்தான் முக்கிய காரணமாக உள்ளது.

சிறுநீர்க் குழாயை ஒட்டியுள்ள இந்தச் சுரப்பி வீக்கமடையும்போது, சிறுநீர்க் குழாயை அழுத்தி அதைக் குறுகலாக்கி விடுகிறது அல்லது வழியை அடைக்கிறது. அதன் விளைவாக, சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேறுவதில் தடையும் சிரமமும் உண்டாகிறது. சுரப்பி வீக்கமடைவதை நாம் உடனே புற்றுநோய் (கேன்சர்) என்று கருத வேண்டியதில்லை.

வயது ஆக ஆக சுரப்பி விரிவடையும் என்பதே உண்மை. என்றாலும், அளவுக்கு அதிகமாக விரிவடையும்போது, சிறுநீரை முக்கி கழிக்க வேண்டியதிருக்கும். அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படும்.

மெலிதான சிறுநீர்தாரை, முக்கியமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு, தூக்கம் பாதித்தல், சற்று தயக்கத்துடன் தாமதமாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்க அதிக நேரம் ஆகுதல், முழுமையாக கழிக்க முடியாமல் சிறுநீர்ப்பையில் தங்குதல், வேகம் குறைந்து சொட்டு மூத்திரமாக வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலி, சிறுநீரருடன் இரத்தம் கலந்து போகுதல், கழித்தப் பின்னும் தன்னையறியாமல் சிறுநீர் வெளியேறுதல் போன்ற தொந்தரவுகள் இருக்கும்.

இந்தப் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகளின் தீவிரத்தை மதிப்பீட்டு உங்கள் தினசரி வாழ்க்கையை அவை எப்படி பாதிக்கின்றன என்பதை அறிந்து தகுந்த சிகிச்சையளிக்க முடியும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொண்டு, உணவுமுறையில் மாற்றங்கள் செய்து தொடர்கண்காணிப்பு இருந்தால் நன்கு குணமடையலாம்.

1455775091 768

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button