முகப் பராமரிப்பு

இரண்டே நாளில் அழகாகலாம்!

முக்கியமான நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ளவேண்டும். ஆனால் இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் உங்களை நீங்கள் அழகுபடுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது. இரண்டு நாட்கள் போதும், உங்களை நீங்கள் சூப்பராக அழகாக்கிக்கொள்ள..! வீட்டிலே அதை செய்துவிடலாம்..!

சருமத்திற்கு:
வறண்ட சருமம் உங்களுக்கு பிரச்சினையாக இருந்தால் உடல் முழுவதும் ‘லிக்யூட் சோப்’ பூசி, ‘பாடி ஸ்கிரப்’ பயன்படுத்தி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்பு நிறைய தண்ணீர் ஊற்றி, நன்றாக கழுவிவிடுங்கள். சருமத்திற்கு பளபளப்பு கிடைக்கும்.

அழகான விழிகளுக்கு :
டீ
பேக் ஒன்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள். பின்பு அதை எடுத்து நன்றாக குளிரவையுங்கள். அதை கண்களை மூடிக்கொண்டு, கண் மீது எல்லா இடங்களிலும் படும்படி பத்து நிமிடங்கள் வையுங்கள்.

தேயிலையில் அடங்கியிருக்கும் கபீன், கண் இமைப் பகுதிகளை அழகாக்கி, கண்களை ஜொலிக்கவைக்கிறது. கண்களில் இருக்கும் வீக்கங்களை அகற்றி பளிச்சிடச்செய்யும். நன்றாக தூங்காவிட்டால் கண்களின் அடியில் கறுப்பு நிறம் படியும். அதையும் நீக்கும் சக்தி, டீபேக்கிற்கு இருக்கிறது.

முகப்பரு நீங்க :
பளிச்சென இருக்கும் முகத்தில் பருக்கள் தோன்றி நிறைய பெண்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. அதற்கும் பரிகாரம் இருக்கிறது. ஒரு ஐஸ் கியூப்பை மஸ்லின் துணியில் பொதிந்து மூன்று நிமிடங்கள் முகப்பரு மீது வைத்திருங்கள். பின்பு துணியில் இருந்து ஐஸ் கியூப்பை நீக்கிவிட்டு, அந்த துணியை லாவண்டர் ஆயிலில் முக்கி, பரு மீது வையுங்கள். இவ்வாறு செய்தால், பாக்டீரியா இன்பெக்ஷன் நீங்கி, இரண்டு நாட்களில் முகப்பரு மறையும்.

கூந்தல் அழகுக்கு :
நீங்கள் விருந்து நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முதல் நாளே உங்கள் முடிக்கு ஏற்ற தரமான ஷாம்புவும், கண்டிஷனரும் பயன்படுத்தி தலையை நன்றாக கழுவுங்கள். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தலைக்கு குளித்து, ‘பேன்’ கீழே நின்று கூந்தலை நன்றாக உலர வையுங்கள்.

பின்பு கூந்தலை பல பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் ‘ப்ளோ டிரை’ செய்யுங்கள். இறுதியில் முடியின் இறுதிப்பகுதியில் ஹெயர் வாக்ஸ் பூசுங்கள். இதன் மூலம் முடி உடைந்து போன அழகு குறைபாடு நிவர்த்தி செய்யப்படும். அழகும், ஜொலிப்பும் கூந்தலுக்கு இதன் மூலம் கிடைக்கும்.

பாதங்களுக்கு :
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களில் பெட்ரோலியம் ஜெல்லி பூசி, சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்குங்கள். மறுநாள் பாதங்களுக்கு மென்மையும், அழகும் கிடைக்கும்.

மேக்-அப் நிலைத்திருக்க:
முகத்தில் பவுண்ட்டேஷனும், காம்பேக்ட் பவுடரும் பயன்படுத்திய பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் ஸ்பிரே செய்து, டிஸ்யூ பேப்பர் வைத்து ஒற்றி எடுத்தால், மேக்-அப் அதிக நேரம் நிலைத்திருக்கும். லிப்ஸ்டிக் அதிக நேரம் நிலைத்திருக்க, உதடுகளில் கண்சீலர் போட்ட பின்பு லிப்ஸ்டிக் போடுங்கள். நெயில் பாலீஷ் இளகிப்போகாமல் இருக்க, அதன் மேல் கிளீயர் கோட் ஒன்று கொடுங்கள்.
bea e1455200219377

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button