பொதுவானகைவினை

குவில்லிங் கலைப் பொருட்கள்

குவில்லிங் என்கிற ஒருவித காகிதக் கலையில் நகைகள் செய்வதை இன்று பள்ளிக்கூடக் குழந்தைகள்கூட செய்ய ஆரம்பித்து விட்டார்கள். உடைகளுக்கு மேட்ச்சாக அவர்களே அவர்களுக்கான குவில்லிங் நகைகளை செய்து கொள்வதுடன், யாருக்காவது அன்பளிப்பு கொடுக்கவும் அந்தக் கலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குவில்லிங் நகைப் புழக்கம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, அதே குவில்லிங் கலையை வைத்து அழகழகான ஷோ பீஸ் மற்றும் கார் டேங்ளர், வால் ஹேங்கிங் என புதுமையான கலைப் பொருட்களை உருவாக்குகிறார் சென்னை, ஐ.சி.எஃப்ஐச் சேர்ந்த ப்ரியா கார்த்திகேயன்.

டிகிரி முடிச்சிட்டு, கொஞ்ச நாள் ஸ்கூல் டீச்சரா வேலை பார்த்திட்டிருந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமா அதைத் தொடர முடியலை. அதே நேரம் வீட்ல சும்மா இருக்க முடியாம, பொழுதுபோக்கா குவில்லிங்கும், ஆரத்தி தட்டு பண்றதையும் கத்துக்கிட்டேன். ஸ்கூல் படிக்கிற பசங்க கூட குவில்லிங் நகைகள் பண்ண ஆரம்பிச்சதால, அதுலயே அட்வான்ஸ்டா வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்.

எந்த உருவத்தைப் பார்த்தாலும் அதை குவில்லிங்ல கொண்டு வர முடியுமானு முயற்சி பண்ணுவேன். அந்த வகையில இன்னிக்கு வரவேற்பறையை அலங்கரிக்கிற ஷோ பீஸ், காருக்குள்ள தொங்க விடற பொம்மைகள், சாமி உருவங்கள், பேனா ஸ்டாண்ட், லேம்ப் ஷேடுனு என்னால எதை வேணாலும் குவில்லிங்ல பண்ண முடியும்” என்கிற ப்ரியா, வெறும் 500 ரூபாய் முதலீட்டில் குவில்லிங் பிசினஸில் இறங்க நம்பிக்கை தருகிறார்.

குவில்லிங் பேப்பர், அதுக்கான டூல்ஸ், அலங்காரத்துக்கான ஸ்டோன்ஸ், வார்னிஷ்னு செலவு ரொம்பக் கம்மி. கற்பனைத் திறன்தான் இதுக்கான மூலதனம். குவில்லிங்னா பேப்பராச்சே… அது எத்தனை நாள் உழைக்கும்கிற கவலையே வேண்டாம். வார்னிஷ் கொடுத்துடறதால, எத்தனை வருஷங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும். அப்பப்ப தூசியை மட்டும் துடைச்சு வச்சுக்கிட்டா போதும். எந்த வயசுக்காரங்களுக்கும் எந்த விசேஷத்துக்கும் அன்பளிப்பா கொடுக்க இதுல நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு. இதை ஒரு பிசினஸா எடுத்துப் பண்ணினா 200 சதவிகித லாபம் சம்பாதிக்கலாம்” என்கிறவரிடம் 3 நாள் பயிற்சி யில் 5 மாடல் குவில்லிங் கலைப் பொருட்களைக் கற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்களுடன் கட்டணம் ஆயிரம் ரூபாய்.
ld4028

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button