முகப் பராமரிப்பு

மங்கு குணமாகுமா?

சருமப் பராமரிப்புக்கு, குறிப்பாக முகத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. முகத்தில் மச்சம்போல ஆரம்பித்து முகம் முழுவதும் பரவி, முக அழகைக் கெடுப்பது ‘மெலாஸ்மா’ எனப்படும் மங்கு.

மெலனின் என்ற நிறமி, சருமத்துக்கு நிறத்தைத் தருகிறது. மெலனின் அதிகரித்தால், சருமத்தில் ஆங்காங்கே கறுப்புத் திட்டுக்களும் புள்ளிகளும் ஏற்பட்டு தோற்றத்தையே கெடுத்துவிடும்.
மெலாஸ்மா என்றால்?

மெலாஸ்மா (Melasma) பிரச்னை, 80 சதவிகிதப் பெண்களுக்கு வரக்கூடியது. சில ஆண்களுக்கும்கூட மங்கு வரும். இது நோய் அல்ல; சருமத்தில் ஏற்படக்கூடிய கறுப்பான பாட்சஸ், புள்ளிகள் எனச் சொல்லலாம். சருமத்தின் சில இடங்களில் கறுப்பு அணுக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாட்ச் பாட்ச்சாக கறுப்பாகத் தெரிகிறது. சூப்பர்ஃபிஷியல், டீப் என்ற இரண்டு வகை மங்குகள் உள்ளன. இது, குறிப்பிட்ட காலத்துக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்னை என்றாலும் சிலருக்கு மீண்டும் மீண்டும் வரலாம்.

யாருக்கு வரும்?
20-35 வயதுள்ளவர்களுக்கு வரலாம். பிறகு 45-50 வயதுள்ளவர்களுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. வேலூர், திருச்சி போன்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு, அதீத வெயில் காரணங்களாலும் மெலாஸ்மா வரலாம்.

என்னென்ன காரணங்கள்?
மரபியல், சூரியக்கதிர்கள், ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிடுதல், ஹார்மோன் சிகிச்சை எடுப்பவர்கள், தைராய்டு பிரச்னை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் மங்குப் பிரச்னை வருகிறது. மெலனொ சைட் என்ற செல்லை உற்பத்தி செய்ய உதவுவது ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன். மெலனின், ஸ்டிமுலேடிங் ஹார்மோனை அதிகப்படுத்துவதும் ஈஸ்ட்ரோஜன் தான். கருவுற்ற காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் அதிகமாகச் சுரக்கும். இது இயல்பான மாற்றம்; இதன் விளைவாகவும் சருமத்தில் மங்கு பிரச்னை வருகிறது.

ஒரு சிலருக்குக் கர்ப்ப காலம் முடிந்த பின் சரியாகிவிடும். சிலருக்குச் சரியாகாமலும் போகலாம். பிரசவத்துக்குப் பின் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருந்து, தானாகச் சரியாகிறதா எனக் கவனித்தப் பின் சிகிச்சை எடுக்கலாம். அதுபோல, மெனோபாஸ் வரும் பெண்களுக்குக்கூட இந்தப் பிரச்னை வரும்போது சரும மருத்துவர், காஸ்மெட்டால ஜிஸ்ட்டிடம் சென்று சிகிச்சை பெறலாம்.

சிகிச்சைகள் என்னென்ன?
முதல் கட்டமாக சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதுதான் சரி. சூரியக் கதிர்கள், அழுக்கு, மாசு, சுற்றுச்சூழலிருந்து காப்பாற்றுவது சன் ஸ்கிரீன்.

ஹைட்ரொகுயினான் (Hydroquinone), ஸ்டீராய்டு (Steroid) க்ரீம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இதனால், மங்கு போகலாம். ஆனால், மீண்டும் பல மடங்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். வேறு சில சருமத் தொல்லைகளும் வரலாம்.

டிசிஏ (TCA -Trichloroacetic acid) என்ற பீல்ஸ் இருக்கிறது. இந்த சிகிச்சையை எடுக்கும்போது, மங்கு தானாகப் போய்விடும். அதிகமாக, அதாவது ஆழமான மங்குவாக இருந்தால், 50 சதவிகிதம்தான் சரியாகும்.

மேலோட்டமாக இருக்கும் மங்கு, பீல்ஸ் செய்யும்போது மூன்று மாதங்களிலேயே சரியாகிவிடும். மங்கு திரும்ப வர வாய்ப்பு உள்ளதால், யாருக்கு மங்கு திரும்ப வருமோ அவர்கள் மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சருமப் பராமரிப்புக்கான பீல்ஸ் செய்துகொள்ளலாம். இதனுடன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதும் அவசியம். அடர் கறுப்பாக இருக்கும் இடத்தை வெண்மையாக்க, ஸ்கின் லைட்னிங் சிகிச்சையும் பயன் அளிக்கும்.

வராமல் தடுக்க
தினமும் மருத்துவர் பரிந்துரைப்படி சருமத்துக்கு ஏற்ற சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று, ஸ்கின் கேர் பீல்ஸ் செய்துகொள்ளலாம்.
ஆண்களுக்கும் மங்கு வரும் என்பதால், அவர்களும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.
வெயிலில் அதிக நேரம் அலைவதைத் தவிர்க்கலாம். முடிந்த அளவுக்கு சன் ஸ்கிரீன், ஸ்கார்ஃப் போன்றவற்றால் முகம், கை, கால்களை மூடி பாதுகாக்கலாம்.

மெனோபாஸ் சமயத்தில் தோன்றும் மங்குப் பிரச்னைக்கு உடனே சரும மருத்துவரை அணுகி, பீல்ஸ் செய்துகொள்ளலாம்.
p64b

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button