capsicum sambar 1624867105
Other News

சுவையான குடைமிளகாய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

* குடைமிளகாய் – 1-2

* துவரம் பருப்பு – 1/2 கப்

* பெரிய வெங்காயம் – 1

* தக்காளி – 1/2

* புளி – 1 நெல்லிக்காய் அளவு

* பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சாம்பார் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

* அதன் பின் சாம்பார் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் புளியை கையால் பிசைந்து, வடிகட்டி அந்நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

* இறுதியாக வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாம்பார் தயார்.

Related posts

சிறுமியின் விவரம் கேட்கும் இசைமைப்பாளர் இமான்..!வைரலாகும் அப்பா பாடல்…

nathan

2023ல் அதிக சம்பளம் வாங்கிய 10 தமிழ் நடிகர்கள் யார் யார்

nathan

BIGGBOSS-ல் இருந்து வந்த ஸ்ருத்திகாவுக்கு பலத்த வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்..!

nathan

கருப்பு நிற பெண்களும் கவர்ச்சியான அழகினைப் பெறலாம்..நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

கடனை அடைக்க உதவியது என் யூடியூப் சேனல்

nathan

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்…

nathan

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா

nathan

குடித்துவிட்டு போதையில் நடிகர் விஜய்..

nathan

என்ன கண்றாவி இதெல்லாம்…? வெறும் டவலுடன் தனிமையில் குதிக்கும் கமல்ஹாசன் மகள் சுருதி!.. வைரல் வீடியோ..

nathan