சமையல் குறிப்புகள்

துர்நாற்றம் வீசும் பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தம் செய்ய டிப்ஸ்

பெரும்பாலானோரின் வீடுகளில் பாத்திரம் கழுவும் தொட்டி மிகவும் துர்நாற்றத்துடன் இருக்கும். அப்படி பாத்திரம் கழுவும் தொட்டியானது துர்நாற்றத்துடனேயே இருந்தால், பூச்சிகள் அதிகம் வர ஆரம்பிக்கும். எனவே அப்பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் தற்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பாத்திரம் கழுவும் தொட்டி உள்ளதால், அவற்றை ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தால், உங்கள் பாத்திரம் கழுவும் தொட்டி புதிது போல் மின்னுவதோடு, துர்நாற்றமின்றியும் இருக்கும்.

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பாத்திரம் கழுவும் தொட்டி முழுவதும் தடவி, பிரஷ் கொண்டு தேய்த்து, பின் கழுவி விட வேண்டும். இப்படி செய்வதால், அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் அழுக்குகள் முற்றிலும் வெளியேறிவிடும் .
ஆல்கஹால் : இரவில் படுக்கும் முன் சிறிது ஆல்கஹாலை பாத்திரம் கழுவும் தொட்டியில் ஊற்றி தேய்த்து, பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் பாத்திரம் கழுவும் தொட்டி பளிச்சென்று புதிது போல் மின்னும்.

சோடா: சோடாக்களை பாத்திரம் கழுவும் தொட்டியில் ஊற்றி தேய்த்தால், தொட்டியில் துரு பிடித்திருந்தாலும், அது நீங்கிவிடும். அதுமட்டுமின்றி, நீரினால் தொட்டியில் ஏற்பட்ட கறைகளையும் நீக்கிவிடும்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாற்றில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை பாத்திரம் கழுவும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொட்டியில் தடவி சிறிது நேரம் கழுத்து பிரஷ் கொண்டு தேய்த்தால், அத்தொட்டியானது புதிது போல் மின்னுவதோடு, துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும

தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

பிடித்தால் அனைவருடனும் பகிருங்கள்

வினிகர்: வினிகர் கொண்டு பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தம் செய்யலாம். அதற்கு வினிகரை பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுற்றி ஊற்றி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்தால், தொட்டியில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, பாத்திரம் கழுவும் தொட்டி புதிதாக காணப்படும்.gfgfhf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button