29.2 C
Chennai
Wednesday, Jan 15, 2025
cauliflower pepper fry 1600070230
Other News

காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை

தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் – 3/4 கப்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* பூண்டு – 2 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

வறுத்து அரைப்பதற்கு…

* பட்டை – 1/4 இன்ச்

* கிராம்பு – 2

* மிளகு – 3/4 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* மல்லி விதைகள் – 1 டீஸ்பூன்

* வர மிளகாய் – 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு, நீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, 3 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின்பு நீரை வடிகட்டி விட்டு, அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து, அதில் ஊற வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, மீதமுள்ள அரைத்த மசாலா பொடியையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி விட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை ரெடி!

Related posts

அடேங்கப்பா! குட்டையான உடை அணிந்தபடி டிக்டாக்கில்.. கவர்ச்சியான குத்தாட்டம் போட்ட நடிகை லட்சுமி ராய்..!

nathan

டீக்கடை நடத்தி வெற்றி பெற்ற ‘கிராஜுவேட் சாய்வாலி

nathan

பிராமி: brahmi in tamil for hair

nathan

நயன்தாரா மகன்களை தோளில் தாங்கும் க்யூட் வீடியோ!

nathan

உளறி கொட்டிய நடிகரின் தந்தை! ஐஸ்வர்யா ராய் அந்த நடிகருடன் தொடர்பில் இருந்தது உண்மைதான்..

nathan

IPhone 15 வாங்க 2 மூட்டை சாக்கு பையில் சில்லறைகளுடன் கடைக்கு வந்த இளைஞர்

nathan

‘புல்லட் மெக்கானிக்’ -கேரள கல்லூரி மாணவி!

nathan

நம்ப முடியலையே…உடல் எடை குறைக்க ப டாத பாடு ப டும் சொப்பன சுந்தரி நடிகை.!

nathan

காதலியை மலை உச்சிக்கு கூட்டி சென்று காதலன்செய்த கொடூரம்

nathan