சட்னி வகைகள்

ஆரஞ்சு தோல் பச்சடி

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு தோல் – அரை கப் ( 3 பழத்தின் உடையது)
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – சுவைக்கு
வெல்லம் – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தக்காளி – 2
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

தாளிக்க :

கடுகு சீரகம் கறிவேப்பிலை எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

* ஆரஞ்சு தோலில் உள்ள வெள்ளையாக இருக்கும் வேர்களை நன்றாக எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்

* தக்காளியை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* அடுப்பில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோலை போட்டு கொதிக்க விடவும். சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.

* 5 நிமிடம் நன்றாக வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசல், அரைத்த தக்காளியை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, வெல்லம் சேர்க்கவும்.

* நன்றாக பக்குவம் வந்ததும் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து பச்சடியில் சேர்க்கவும்.

* சுவையான, புளிப்பான ஆரஞ்சு தோல் பச்சடி ரெடி.
c501ef93 69bf 4935 9b5e 0878d23e0837 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button