கேக் செய்முறை

வாழைப்பழ பான் கேக்

என்னென்ன தேவை?

மைதா – 4 கப்,
பால் – 1 கப்,
பிசைந்த வாழைப்பழம் – 2 கப்,
தேவைப்பட்டால் முட்டை – 2,
ப்ரவுன் சுகர் – 1/2 கப்,
பரிமாறும் போது உபயோகிக்க தேன்,
மேப்பிள் சிரப் அல்லது ஜாம்- சிறிது.
எப்படிச் செய்வது?

மைதாவுடன் பால், வாழைப்பழம் சேர்த்து கலக்கவும். முட்டை சேர்ப்பதானால் லேசாக அடித்த முட்ைடயைச் சேர்க்கவும். கலவையில் ப்ரவுன் சுகரையும் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் வைக்கவும். பிறகு அடிக்கனமான பேனில் ஒவ்வொரு கரண்டியாக கனமான தோசையாக வார்க்கவும். பரிமாறும் போது தேன் அல்லது மேப்பிள் சிரப் அல்லது ஜாம் சேர்த்து பரிமாறவும்.

sl4055

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button