சரும பராமரிப்பு

சருமத்தை பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிவை

* பப்பாளிக் கூழ் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும் கலந்து முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறண்ட சருமம் பொலிவு பெறும்.

* கொத்தமல்லித் தழையையும், புதினாவையும் சம அளவு எடுத்து அரைத்து, எலுமிச்சை கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் வழிகிற சருமம் அழகு பெறுவதுடன், மன அழுத்தமும் சரியாகும்.

* பாலாடை அல்லது தயிருடன், தேன் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருவளையங்கள் மறையும்.

* பாதாமும், ஓட்ஸும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து முகத்தில் தடவிக் கழுவினால், சருமம் பளபளப்பு பெறும்.

* நெல்லிக்காயை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும்.

* தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பருக்கள் வராமல் தவிர்க்கலாம்.

* மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பிரகாசமடைந்து, எண்ணெய் வடியாமல் இருப்பதுடன் என்றும் இளமையுடன் தோற்றமளிக்கலாம்.

2f60546b 5405 423a b73d d76903f26cbf S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button