கூந்தல் உதிர்வா…? எளிய தீர்வுகள் இதோ…

img1130309015_1_1இன்றைய நிலையில் கூந்தல் உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துவருகிறது. அன்றாடம் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு கூந்தல் உதிர்வு ஏற்படுவது இயற்கை என்றாலும், உதிர்ந்த இடத்தில் மீண்டும் கூந்தல் வளராமல் இருந்தால் பிரச்சனை ஆரம்பித்து விட்டது என அர்த்தம்.

சுற்று சூழல் மாசு,வெப்பம் போன்ற புற காரணிகள் ஒருவரின் கூந்தல் வளர்ச்சியை நிர்ணயிப்பதை போலவே நாம் உண்ணும் உணவும் கூந்தல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகுக்கிறது.

சரியான அளவில் ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிடாமல் இருந்தாலோ, ஒழுங்காக கூந்தலை பராமரிக்காமல் இருந்தாலோ பெருமளவு கூந்தல் உதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இந்த அவசர உலகத்திலும், உங்களது அழகிய கூந்தலை ஆரோக்கியமாக பாதுகாக்க இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் எளிய டிப்ஸை பயன்படுத்துங்கள்.

தலை முடி ஈரமாக இருக்கும் போது தயவு செய்து சீப்பை பயன்படுத்தாதீர்கள்

முடிந்த அளவிற்கு கூந்தல் சிக்கலாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.Untitled-1 copy

மன உளைச்சல், கவலை ஆகியவற்றை விட்டுத்தள்ளுங்கள்

கூந்தல் உதிர்வதற்கு முக்கிய காரணம், தலையில் படிந்திருக்கும் அழுக்கு. சுற்றுப்புற சூழலால் ஏற்படும் இந்த மாசு, கூந்தல் வேர்களை வலுவிழக்க செய்துவிடும். எனவே, தினமும் வெளியே செல்பவர்கள் அன்றாடம் தலைக்குளிப்பது அவசியம்.

தலை முடியை சுத்தம் செய்ய இயற்கையான சிகைக்காய் போன்றவற்றை உபயோகிப்பது சிறந்தது. நீங்கள் ரசாயன தன்மையுடன் இருக்கும் ஷாம்பூவை உபயோகிப்பவர் என்றால், நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சிறிது தண்ணீர் கலந்தபின் அதை தலையில் தேயுங்கள்.

வைட்டமின் “சி”, புரதம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய், ஆரஞ்சு பழம், பால், முட்டை, பேரிச்சை போன்ற உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்.

உங்கள் கூந்தல் வேர்கள் பலவீனமாக இருப்பதுபோல் உணர்ந்தால், அதிக அளவு எண்ணெய்யை பயன்படுத்தாதீர்கள்.

அடிக்கடி எண்ணெய், ஷாம்பூ போன்றவற்றை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்.

ஒவ்வொரு முறை கூந்தலை அலசும்போதும், அதிலிருந்து எண்ணெய் மற்றும் ஷாம்பூ போன்றவை முற்றிலுமாக நீங்கிவிட்டதா என பாருங்கள். தலைமுடியில் எண்ணெய் பிசுக்கு அல்லது ஷாம்பூ இருந்தால் அதுவே கூந்தல் உதிர்வுக்கு காரணமாகிவிடும்.

எந்த வகையான பிரத்யேக பொருட்களையும் பயன்படுத்தாமலே உங்கள் கூந்தலை இந்த எளிய குறிப்புகளின் உதவியோடு உதிர்வதிலிருந்து சுலபாக பாதுகாத்துக்கொள்ளலாம்.

Leave a Reply