முகப் பராமரிப்பு

முகத்தில் வரும் பருக்களை 1 மாதத்தில் போக்க வீட்டு வைத்தியம்

முகத்தில் பிம்பிள் அல்லது பருக்கள் அதிகம் வருவதற்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பது தான் காரணம். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயை சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

முகத்தில் உள்ள பருக்களைப் போக்க சில ஆயுர்வேத வழிகள் உள்ளன. இவற்றை தினமும் பின்பற்றினால், 15 நாட்களில் நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

* தினமும் குளிக்கும் முன் வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், முகத்தில் உள்ள பருக்களை சீக்கிரம் போக்கலாம்.

* ஜாதிக்காயை சிறிது நீர் சேர்த்து கல்லில் தேய்த்து வரும் பேஸ்ட்டை பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அவை வருவதையும் தடுக்கலாம்.

* பருக்கள் முதலில் உடலினுள் தான் ஆரம்பமாகிறது. அதிலும் டாக்ஸின்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலினுள் பருக்கள் உருவாக ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் தெரியும். எனவே தினமும் அதிகப்படியான அளவு நீரைக் குடித்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி பழங்கள் மற்றும் காய்கறிகளையும் தவறாமல் அதிகம் உட்கொள்ளுங்கள்.

* உங்கள் முடியில் எண்ணெய் பசை அதிகம் இருப்பின், அதன் காரணமாகவும் பருக்கள் வரக்கூடும். எனவே வாரத்திற்கு 2 முறை தலைக்கு ஷாம்பு போட்டு குளியுங்கள். மேலும் உடல் எடையையும் சீராக பராமரித்து, நல்ல தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

540085e1 a7b0 41e3 92da 89cf8a45c13f S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button