ஃபேஷன்

அழகை மெருகூட்டும் அணிகலன்கள்!

உடலுக்கு தகுந்த நேர்த்தியான ஆடைகள் அணியும் போது அழகு கூடுகிறது. அதேநேரத்தில் ஆடைகளுக்கு ஏற்ப அணிகலன்கள் அணிந்தால் அழகு இரடிப்பாகிறது. அதனால், பெண்கள் அணிகலன்களை தேர்ந்தெடுக்கும்போது சிறிது கவனம் அவசியம். ஏனெனில், அணிகலன்கள் அணியும்போது, சந்தோசத்தையும் அழகின் மேல் ஈர்ப்பையும் அளிக்கிறது. நகைகள் மட்டுமே அணிகலன்கள் அல்ல. பொன்நகைகளோடு சேர்ந்த காலணிகள், ஹேண்ட்பேக், கண்ணாடி, வாட்ச், பெல்ட், ஸ்கார்ப், வாசனை திரவியம், துப்பட்டா, தொப்பி, கைக்குட்டை, டை என பட்டியல் வெகுநீளம்..பெண்களை அதிகம் ஈர்ப்பது பொன்நகைகள்தான். பெண்களின் வாழ்வில் நகைகள் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

அழகு, ஆடம்பரம், கவுரவம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கண்ணாடியாக நகைகள் விளங்குகின்றன. திருமண விழாக்கள், பார்ட்டி என எந்த சுக நிகழ்வுக்கு சென்றாலும், பெண்கள் அணியும் நகைகளே, பிறரை கவர்வதற்கு முக்கியப்பொருளாக உள்ளது. பாரம்பரிய நகைகள், பேஷன் நகைகள், மரம், கண்ணாடி, சணல் மற்றும் பேப்பரில் தயாரான நகைகள் என, எண்ணத்திற்கு ஏற்ப பெண்களின் விருப்பங்கள் மாறுபடும். செல்லும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப நகைகளை அணிய வேண்டும். ஏனெனில், ஒருசில நேரங்களில் அணியும் நகைகள், பிறர் முகம் சுளிக்க வைக்கவும் செய்யும்.

பட்டுப்புடவைக்கு நெக்லஸ், ஆரம் மற்றும் முத்துமாலையை அணியலாம். மாறாக மெல்லிய செயின், கண்ணாடிகளால் ஆன நகைகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. பகல்நேரத்தில் சில்வர் கலர் நகைகளும், மாலை நேரத்தில் கோல்டு கலர் நகைகளும் ஏற்றவையாகும். நகைகளை பொறுத்தவரை பார்மல், கேஷூவல், ரைடல், ஈவ்னிங், ஸ்பிரிச்சுவல் என 5 வகைகளாக பிரிக்கலாம். பார்மல் நகைகள் ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், கனிம, சிபி, துருபிடிக்காத எக்கு ஆகியவையால் தயாரிக்கப்படுகிறது. மேலும், இந்நகைகளில் ரத்தினம், கிரிஸ்டல், அலங்காரக்கல் பயன்படுத்தப்படுகின்றன.

பார்மல் நகைகளான நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம் ஆகியவை திருமணம், மீட்டிங் ஆகிய சம்பிரதாயமான விழாக்களில் அணியலாம். உடைக்கும் பொருத்தமாக இருக்கும். கேஷூவல் நகைகள் சணல், மரம், பேப்பர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தினமும் அணியக் கூடியவைகளில் கேஷூவல் நகைகளும் ஒன்று. தண்ணீரில் நனைந்தாலும் பாதிப்பு ஏற்படாது.

இவற்றில் செயின், வளையல், மோதிரம் ஆகியவற்றை கேஷூவல் நகைகளில் பொருந்தும். சிப்பிகளால் தயாரிக்கப்படும் நகைகளை இளம் தலைமுறையினர் பயன்படுத்தினால், வித்தியாசமான தோற்றம் கிடைக்கும். ரைடல் நகைகள் ஒயிட் மெட்டல், ஒயிட் கோல்டு, மஞ்சள் கோல்டு, வைரம், ரத்தினம் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. திருமணப்பெண் அணியக்கூடிய நகைகள் ரைடல் எனப்படும். இந்த நகைகள் பலவிதமான வெரைட்டிகளுடன் மார்க்கெட்டில் கிடைக்கின்றன1428581531manamakal 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button