29.5 C
Chennai
Tuesday, May 21, 2024
33add2b7 cc20 43be 9702 5aee3d02e5cb S secvpf
சைவம்

வெந்தயக்கீரை சாம்பார்

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை – 2 சிறுகட்டு,
துவரம்பருப்பு – ஒரு கப்,
புளி – எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்.

* வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும்.

* வாணலியில் கரைத்த புளியைக் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.

* எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப்புண் ஆற்றும்.33add2b7 cc20 43be 9702 5aee3d02e5cb S secvpf

Related posts

கேரளா பருப்பு குழம்பு

nathan

புளிச்ச கீரை புளியோதரை

nathan

கீரை தயிர்க் கூட்டு

nathan

கடாய் பனீர் – kadai paneer

nathan

சைவ பிரியர்களுக்கான காளான் சாதம்

nathan

வறுத்தரைத்த காளான் குழம்பு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கடாய் பன்னீர்

nathan

செட்டிநாடு மசாலா குழம்பு

nathan

பாலக் பன்னீர்

nathan