ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

காலை உணவை தவிர்ப்பவரா?

avoiding_breakfast_002பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் வாழ்ந்து வரும் நாம், காலை உணவை அறவே தவிர்த்துக் கொண்டிருக்கிறோம்.

இயந்திர வாழ்க்கையினால் வேளைக்கு சாப்பிடாமல் பிறகு அலுவலக கேன்டீனிலோ அல்லது ஹொட்டலிலோ மதிய உணவை சாப்பிடுகின்றனர்.

பணிபுரிபவர்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள பெண்களும், முதியவர்களும் விரதம், பூஜை செய்ய வேண்டும் என சில காரணங்களை காட்டி காலை உணவை தவிர்க்கின்றனர்.

ஆனால் இதனால் நம் உடலில் ஏற்படும் பின்விளைவுகள் எத்தனை தெரியுமா?

* காலை வேளையில் பட்டினி கிடந்தால், வயிற்றில் சுரக்கும் “ஹைட்ரோ குளோரிக்” அமிலம் வயிறு, குடல் பகுதிகளில் உள்ள திசுக்களை பாதிக்கத் தொடங்கி, வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது.

* உணவுக்கு பதிலாக நொருக்கு தீனிகளை சாப்பிட்டால், உணவுக் குழாயில் எரிச்சல் ஏற்படுவதுடன், நோய் தாக்குதலுக்கான ஆரம்ப நிலையை உருவாக்குகிறது.

* தினந்தோறும் காலை உணவை தவிர்ப்பதால், அஜீரணக் கோளாறு ஏற்படும்.

* வயிற்றில் உள்ள இரைப்பைக்கு தேவையான உணவை குறிப்பிட்ட நேரங்களில் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் இரைப்பை சுருங்கிவிடும்.

இதெல்லாம் சாப்பிடுங்க

வழக்கமாக செய்யும் பொங்கல், தோசை போன்ற சிற்றுண்டிகளை விட கேழ்வரகு இட்லி, சம்பா தோசை, கோதுமை ரவா உப்புமா, போன்ற தானியங்களை கொண்டு, பல்வேறு வகையான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

இதனால் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், வயிற்றுக்கு எந்த ஒரு கோளாறும் ஏற்படமால் நாம் தவிர்க்க முடியும்.

பழங்களில் ஏதாவது ஒன்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த வகை உணவுகளைச் சாப்பிடுவதால் சரியான உடலமைப்பும், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி, இ போன்ற ஊட்டசத்துடன், அன்றைய தினத்துக்குத் தேவையான புத்துணர்வும் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button