24.4 C
Chennai
Tuesday, Jan 14, 2025
chettinad chicken roast 05 1457166123
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட்

செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்காதவர்களே இல்லை. அந்த ரெசிபிக்களை வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (கீறியது)
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செட்டிநாடு மசாலாவிற்கு…

மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 5-6
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 3 இன்ச்
கல்பாசி – 2 துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
மிளகு – 1 டீஸ்பூன்
அன்னாசிப்பூ – 1

செய்முறை:

முதலில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

chettinad chicken roast 05 1457166123

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, 20 நிமிடம் மிதமான தீயில் சிக்கனை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

இப்போது சிக்கனில் இருந்து தண்ணீர் வெளிவந்திருக்கும். இந்நிலையில் மீண்டும் சிக்கனை பிரட்டி விட்டு, மூடி வைத்து, 15 நிமிடம் மீண்டும் வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், தீயை அதிகரித்து, அதில் மசாலா பொடியை சேர்த்து 1 நிமிடம் நன்கு பிரட்டி, கொத்தமல்லித் தூவி இறக்கினால் செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெடி!!!

Related posts

சுவையான செட்டிநாடு பூண்டு ரசம்

nathan

வட இந்திய ஸ்டைலில் காரமான கத்திரிக்காய் வறுவல்

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா

nathan

தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

nathan

செட்டிநாடு மீன் பிரியாணி,tamil samayal tips

nathan

செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு

nathan

செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan