”எனக்கு ஆறு வயதாக இருந்தபோது, இரண்டு பேர் என்னை அன்புடன் அழைத்தனர்…” என, கேரள மாநிலம், பாசனந்திதாவை சேர்ந்த கலெக்டர் திவ்யா ஷியர், தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திவ்யா எஸ் ஐயரின் சொந்த ஊர் திருநெல்வேலி. திருவனந்தபுரத்தில் சப்-கலெக்டராக இருந்தபோது காங்கிரஸ் எம்எல்ஏ சபரிமநாதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது பாசனந்திட்ட கலெக்டராக இருக்கிறார்.
குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் ஏற்பாட்டில் பாசனந்திட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி முகாமின் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
நான் ஒன்றாம் வகுப்பு படித்த போது இரண்டு ஆண்கள் என்னை பக்கத்தில் அழைத்து பாசம் காட்டினர். இவர்கள் என்னை ஏன் தொட வேண்டும், உண்மையிலேயே பாசத்துடன் இருக்கிறார்களா என என்னால் யூகிக்க முடியவில்லை. அவர்கள் என் ஆடையை அவிழ்க்க முயற்சித்த போதுதான் விபரீதத்தை புரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி ஓடினேன். என் தாய், தந்தையர் எனக்கு தந்த தைரியம்தான் அந்த பேராபத்தில் இருந்து என்னை காத்தது. அதன் பின்னர் கூட்டங்களுக்கு சென்றால் அந்த இரண்டு முகங்கள் இருக்கிறதா என்பதை தேடுவேன்.
குழந்தைகள் எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் அத்துமீறல்களை குழந்தைகளுக்கு பெற்றோரும், ஆசிரியரும் சொல்லித்தர வேண்டும். சிறு வயதிலேயே குட் டச், பேட் டச் பற்றி சொல்லித்தர வேண்டும். பட்டாம்பூச்சி போல பறந்து நடக்க வேண்டிய பருவத்தில் அவர்களை பேராபத்தில் சிக்காமல் பாதுகாக்க வேண்டியது இந்த சமூகத்தில் அனைவரது கடமை. இவ்வாறு அவர் பேசினார்.