போப் பிரான்சிஸ் சமீபகாலமாக வயது தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். போப் பிரான்சிஸ் சுவாச தொற்று காரணமாக ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் சுவாச நோய்த்தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், கொரோனா வைரஸ் இல்லாதவர், பல நாட்களாக மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார், விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் சிகிச்சை பெற்று வந்த அதே மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் அளித்தார். பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காக மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுக்கு சென்றார்.
போப் பிரான்சிஸ் இளம் நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளை மருத்துவமனைகளில் சந்தித்து ஆறுதல் கூறினார்.