இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி உடல்நலக்குறைவு காரணமாக குஜராத்தில் காலமானார். அவருக்கு 88 வயது 60 மற்றும் 70களில் துரானி இந்தியாவில் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்-ரவுண்டரான இவர், 1961-62ல் இங்கிலாந்துக்கு எதிராக தனது துணிச்சலான ஆட்டத்தால் பிரபலமானார். துராணியின் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.