ப்ளேபாய் உலகின் மிகப் பிரபலமான கவர்ச்சி இதழாகும், இது அதிக வாசகர்களைக் கொண்டுள்ளது.
பிரான்ஸ் பெண் மந்திரி மார்லின் ஷியாபா (40) போஸ் கொடுத்துள்ளார்.
பிளேபாய் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பவர்கள் பொதுவாக நிர்வாணமாகவே இருப்பார்கள். ஆனால் மார்லின் ஷியாப்பா அவ்வாறு செய்யவில்லை மற்றும் டிசன்டாகவே போஸ் கொடுத்திருந்தார்
இருப்பினும், வயது வந்தோர் பத்திரிகைகளுக்கு மந்திரி ஒருவர்எவ்வாறு போஸ் கொடுக்கிறார்கள் என்பதில் சர்ச்சை உள்ளது.
பெண்கள், ஓரினச்சேர்க்கை உரிமைகள் மற்றும் கருக்கலைப்பு குறித்து பிளேபாய் பத்திரிகைக்கு 12 பக்க பேட்டியில் மர்லின் போஸ் கொடுத்துள்ளார்.
2017 முதல் பிரெஞ்சு அரசாங்கத்தில் உறுப்பினராக உள்ள மெர்லின், சர்ச்சைக்கு புதியவர் அல்ல. பிரதமர் உட்பட வலதுசாரிகள் பலர் அவர் தவறு செய்ததாக நம்புகிறார்கள்.
ஆனால் மார்லின் தான் சரியானதைச் செய்ததாக வலியுறுத்துகிறார். இதற்கு பதிலடியாக அவர் ட்வீட் செய்துள்ளார்.
அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் பிளேபாய் விளக்கமளித்துள்ளது. “மர்லின் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். எங்கள் இதழ் வெறும் ஆண்களுக்கான இதழ் அல்ல என்பதை புரிந்து கொண்டார். பெண்ணிய இயக்கத்திற்கான கருவி என்பதை புரிந்து கொண்டார்.” பிளேபாய் ஒரு ஆபாச இதழ் அல்ல. இது 300 பக்க புத்தகம் மற்றும் இதழ். .இது ஒரு அறிவுசார் புத்தகம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.