அசைவ வகைகள்

முட்டை தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள் :

முட்டை – 4
தக்காளி – 3
வெங்காயம் – 2
மஞ்சள்தூள், சோம்பு – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
முந்திரிப்பருப்பு – 4
தேங்காய்த்துருவல் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

* முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வதக்கவும்.

* அடுத்து தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 7 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் வேக வைத்து முட்டையை போடவும்.

* குழம்பு திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* சுவையான முட்டை தக்காளி குழம்பு ரெடி.
40 0640e8ca3bb3 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button