டொனால்ட் டிரம்ப் ஜனவரி 2021 வரை அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருக்கிறார். 2016 ஆம் ஆண்டில், தொழிலதிபர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது ஒரு ஆபாச நடிகை எழுப்பிய குற்றச்சாட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
டொனால்ட் டிரம்ப் மீது ஏற்கனவே 12க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆதார வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஆபாச நடிகை டிரம்ப்புடனான தனது உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் எழுதியுள்ளார். 2016 ஜனாதிபதித் தேர்தலின் போது வெளிவந்த இந்தக் கூற்றுக்கள் அனைத்தையும் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலித்தது.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் ஆபாச நட்சத்திரம் ஸ்டார்மி டேனியல்ஸுடன் கடந்தகால உறவுமுறை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, ஆபாச நட்சத்திரத்துடன் வைரலான விவகாரம் டிரம்பிற்கு எதிராக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஸ்டோர்மி டேனியல்ஸை பேசவிடாமல் தடுக்க டிரம்ப் 1 லட்சத்து 30 ஆயிரம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்ப் மீதான ஆவணங்கள் உறுதியானவை என்றும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவர் நீதிமன்றத்தில் ஆஜராக திட்டமிட்டுள்ளதால், நியூயார்க் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மன்ஹாட்டன் நீதிமன்றங்களுக்கு பலத்த பாதுகாப்பு மற்றும் தடுப்புகள் போடப்பட்டன. நீதிமன்றத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. நீதிமன்றத்திற்கு செல்லும் சாலையில் ஏராளமான ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு, விஐபிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, டிரம்ப் நேற்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். இதைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வானொலி ஒளிபரப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, முன்னாள் அதிபர் டிரம்பின் கைரேகை மற்றும் புகைப்படம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த சம்பவம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானார். அங்கு அவர் சட்டப்படி கைது செய்யப்பட்டார். அவர் கைரேகை பதிவு செய்யப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மேல்முறையீட்டுக்கான 9-வது சர்கியூட் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு ஒன்றில், டிரம்பின் சட்ட விசயங்களுக்காக வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு, செலவு தொகையாக ரூ.9.86 கோடிக்கும் கூடுதலான தொகையை வழங்க வேண்டும் என்று ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில், டேனியல்சை அமைதிப்படுத்த பணம் கொடுத்தது உள்ளிட்ட 34 கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்கில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில் இந்த உத்தரவும் வெளியானது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது என்பது இது முதல் முறையாகும்.