1980 களில் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக புகழ் பெற்ற ஸ்ரீதேவி, இந்தி திரையுலகிலும் ஆதிக்கம் செலுத்தி தயாரிப்பாளர் போனிகாபூரை மணந்தார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி இறந்து சில வருடங்கள் ஆகிறது. ஜான்வி கபூர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் மராட்டிய முன்னாள் பிரதமர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹலாரியாவுக்கும் இடையே காதல் இருப்பதாக ஏற்கனவே வதந்திகள் பரவின. இவர்கள் இருவரும் கோவிலில் ஜோடியாக வலம் வரும் வீடியோ இணையதளம் ஒன்றில் வெளியாகி வைரலாகி வருகிறது.தெலுங்கில் ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆர் தெலுங்கில் அவர் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.