பிரபல நடிகை நயன்தாரா நேற்று தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கும்பகோணம் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். இதற்காக நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை விமான நிலையத்தில் திரண்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் கும்பகோணத்தை அடுத்த மேலவத்தூர் கிராமத்தில் ஆற்றங்கரையில் உள்ள குல தெய்வமான காமாட்சி அம்மன் கோவிலுக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காரில் புறப்பட்டு சென்றனர். அவரை பார்க்க ரசிகர்களும், ஊடகங்களும் குவிந்ததால் நயன்தாரா அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது கோபமடைந்த நடிகை நயன்தாரா, நாங்கள் சாமி கும்பிட வந்தோம், எங்களுக்காக 5 நிமிடம் காத்திருந்தோம். அதன் பிறகு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அதையடுத்து கல்லூரி மாணவர்கள் சிலர் நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது மாணவியின் கை நயன்தாரா மீது விழுந்தது. இதனால் மாணவிகளை எச்சரித்து விட்டு நயன்தாரா வெளியேறினார்.
இதையடுத்து நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருச்சி ஸ்டேஷன் சென்றனர். இதையறிந்த ரசிகர்கள் நயன்தாராவை பார்க்க ஸ்டேஷனுக்கு விரைந்தனர். ஆனாலும் நயன்தாரா கடுப்பானார். அங்கிருந்த ரசிகர் ஒருவர் அவரை செல்போனில் படம் எடுக்க முயன்றார்.
இதை பார்த்து ஆத்திரமடைந்த நயன்தாரா, புகைப்படம் எடுத்தால் போனை உடைத்து விடுவேன் என புகைப்பட கலைஞரை எச்சரித்துள்ளார்.நேற்று எங்கு சென்றாலும் நயன்தாரா கோபத்தில் இருந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.