மகாராஷ்டிரா மாநிலம் கண்டிவாரி மேற்கு பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் படிக்கும் சிறுவனின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்த பெற்றோர் அந்த சிறுவனை பற்றி கேட்டனர்.
பின்னர் ஆசிரியர் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பிய போது, பள்ளியின் சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில், மாணவியை ஆசிரியர் தாக்குவது பதிவாகியுள்ளது.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.