இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி எப்பொழுதுமே உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல குடிக்கும் தண்ணீரிலும் பிட்னஸாக இருக்கவேண்டும் என பார்த்துகொள்வார்.
அவர் மேற்கொள்ளும் மாற்றங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல. வேறு சில அடிப்படைவிஷயங்களிலும் கோஹ்லி மாற்றம் செய்திருக்கிறார்.
அந்த வகையில், விராட் குடிக்கும் ‘பிளாக் வாட்டர்’(‘Black Water’) விலை லிட்டருக்கு கிட்டத்தட்ட 3000-4000 ரூபாயாம். இந்த நீர் இயற்கையான-கருப்பு கார நீர் (natural-black alkaline water) ஆகும். இது உடலில் நீர்சத்து தங்கியிருக்க உதவுகிறது. ‘பிளாக் வாட்டர்’-இல் pH அதிகமாக உள்ளது.
மேலும், கோவிட் பாதிப்பு தொடங்கிய பிறகு, விராட் கோலி, ஊர்வசி ரவுடேலா உட்பட பல பிரபலங்கள், தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் ஆரோக்கியமாகவும் இருக்கவும் ‘பிளாக் வாட்டர்’ க்கு மாறியுள்ளார்கள்.
இந்த தண்ணீர் சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது, எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும், அதோடு மனச்சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது என்று கூறப்படுகிறது.
கோஹ்லி எப்போதும் தனது வாழ்க்கையில் சிறந்தவற்றுக்காக பாடுபடுவதை நாம் அறிவோம், அவருடைய வாழ்க்கையில் அவர் எடுக்கும் தேர்வுகள் இந்த உண்மைக்கு ஒரு சாட்சியாகும். கோஹ்லி சிறந்த தரமான தண்ணீரை உட்கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.