பிரபல டைம் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் டாப் 100 செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், தி டைம்ஸ் அதன் வாசகர்களிடம் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலைக் கண்டறிந்து முடிவுகளை வெளியிடுகிறது. அப்படித்தான் 2023-ம் ஆண்டு வாக்கெடுப்பில் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இந்த பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், நடிகர் மைக்கேல் யோ, கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசிலின் லூயிஸ் இனாசியோ லுலா டா லுலா ஆகியோர் அடங்குவர்.
டைம் இதழின் அறிக்கையின்படி, மொத்தம் பதிவான 12 கோடிக்கும்அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் மட்டும் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
பதானின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஷாருக் கான் ஒரு பெரிய பத்திரிகையின் வாசகர்களின் வாக்கெடுப்பில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
நடிகர் ஷாருக்கான் தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து ஜூன் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதுமட்டுமின்றி டாங்கி என்ற படத்திலும் நடிக்க ஷாருக்கான் கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.