கடையில் வாங்கும் உணவில் முடி காணப்படும்.
மலேசியாவில் ஒருவர் வாங்கிய நூடுல்ஸில் தங்கச் சங்கிலி கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து ஆண்டி டான் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தங்க செயின் மற்றும் நூடுல்ஸ் படங்களை பதிவேற்றம் செய்திருந்தார்.
அழுகை மற்றும் சிரிப்பு ஈமோஜியையும் ஒன்றாக பகிர்ந்து கொண்டார்.
சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை…
அவருடைய நண்பர்கள் சிலர் அந்த போஸ்டுக்கு கீழே உள்ள கடையின் முகவரியைக் கேட்டனர்.
“எங்கே வாங்கினீங்க? எனக்கும் வேணும்…”
உணவில் சங்கிலி எப்படி வந்தது என்பது தெரியவில்லை.
இது உண்மையான தங்கமா இல்லையா என்பதை டானும் குறிப்பிடவில்லை.