பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானார் ஜனனி.இலங்கையில் பிறந்த ஜனனி இலங்கையில் உள்ள பிரபல சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். இந்த நிகழ்ச்சியில், ஜனனி தனது முழு ஆட்டத்தையும் வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். பல போட்டியாளர்களை எதிர்கொண்ட ஜனனி, பொம்மை டாஸ்க், பேக்கரி டாஸ்க் என அனைத்து டாஸ்க்குகளையும் முறியடித்தார்.
வாரந்தோறும் நாமினேட் செய்யப்பட்டாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு வருகிறார்.ஜனனிக்கு அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம்.எதிர்பாராதவிதமாக குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி இப்போது விஜய்யின் 67வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.தற்போது எடுத்த அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது ஜனனியின் அழகை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.இளம் வயதினரையும் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.