மருத்துவ குறிப்பு

உடல் பருமனால் ஏற்படும் வியாதிகள்

இன்றைக்கு உலகம் முழுக்க எல்லா நாடுகளிலுமே குண்டான மனிதர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். உடல் உழைப்பு இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம். நல்ல உடல் நலமும், மனநலமும் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியம்.

உடல் உழைப்புக்கு அடுத்தபடியாக, அதிகமாக உண்பது உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது. இந்த இரண்டு காரணங்களும் ஒன்று சேரும் போது, உண்ணும் உணவு கொழுப்பாக மாறி, உடலில் தேங்கி உடல் பருமனை அதிகரிக்கிறது.

உடல் பருமனை பொதுவாக ‘பி.எம்.ஐ.’ என்ற குறியீட்டால் குறிப்பது வழக்கம். சாதாரண ஒரு மனிதனின் பி.எம்.ஐ. 18-க்கும் 24-க்கும் இடையில் இருக்க வேண்டும். இது ஆரோக்கியமான உடல். பி.எம்.ஐ. 25-க்கு மேல் போனால் அதிக உடல் எடை உடையவர் என்றும், பி.எம்.ஐ. 35-க்கு மேல் இருந்தால் மிக அதிக உடல் எடை, பருமன் உடையவர் என்றும் பிரிக்கிறார்கள்.

இதுதவிர வேறு காரணங்களும் உண்டு. மூளையின் அடிப்பகுதியில் ஏற்படும் கட்டி, அட்ரீனல் கணையத்தில் ஏற்படும் கட்டிகள், தைராய்டு சுரப்பியால் ஏற்படும் குறைபாடு, குறிப்பிட்ட சில வியாதிகளுக்காக தொடர்ந்து எடுக்கும் சில மருந்துகள் இவற்றால் உடல் எடையும், பருமனும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். சில நேரங்களில் எந்த பரிசோதனையிலும் கண்டுபிடிக்க கூட முடியாமல் போகலாம். உடல் எடை, பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சினைகள் வரலாம். அதில் முக்கியமாக இளம் வயதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல் ஆகிவை சம்பந்தப்பட்ட வியாதிகள், உடலை தாங்கும் மூட்டில் ஏற்படும் தேய்மானம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

எனவே அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு அன்றாட வாழ்க்கை பாதிப்பதோடு, அதனால் ஏற்படும் வியாதிகளால் பல பிரச்சினைகள் வரலாம். எனவே உடல் பருமன் உடையவர்களுக்கு எடையுடன் சேர்த்து, மற்ற வியாதிகளுக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது.

பொதுவாக பி.எம்.ஐ. 35 உடன் சர்க்கரை போன்ற வியாதிகள் இருந்தால் அவர்களுக்கு சில குறிப்பிட்ட அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இரைப்பை மாற்றுப்பாதை, இரைப்பையின் கொள்ளளவை குறைக்கும் அறுவை சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி மூலம் செய்யப்படுகின்றன. இந்த வகை சிகிச்சைகளுக்கு பின் அதிகபட்ச எடை குறைவதோடு, எப்போதும் எடை அதிகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

18 வயதிலேயே ஆண்கள் விந்தணுவை சேமித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!

nathan

சர்க்கரையை நோயை குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள்

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: