சைவம்

சுரைக்காய் பால் கூட்டு

தேவையான பொருள்கள் :

சுரைக்காய் – 150 கிராம்
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – அரை ஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்

செய்முறை :

• சுரைக்காய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

• அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

• வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.

• சுரைக்காய் நன்கு வெந்து பால் வற்றி வரும் போது அடுப்பை அணைக்கவும்.

• சுரைக்காய் பால் கூட்டு ரெடி.f6208410 6700 465a b3ed 31fb79416e0b S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button