சைவம்

சோயா பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப்,
சோயா உருண்டைகள் – 15,
பெரிய வெங்காயம் – 3,
தக்காளி – 3,
பச்சை மிளகாய் – 1,
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்,
புதினா – அரை கட்டு,
கொத்தமல்லித்தழை – கால் கட்டு,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
சற்று புளிப்பான தயிர் – கால் கப்,
எலுமிச்சம் பழம் – 1 மூடி,
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

• அரிசியை கழுவி ஒன்றுக்கு ஒன்றரை என்ற அளவில் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள்.

• சோயாவை கொதிக்கும் நீரில் பத்து நிமிடம் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் இரு முறை அலசி எடுங்கள்.

• வெங்காயம், தக்காளியை நீள நீளமாக நறுக்குங்கள்.

• மிளகாயை கீறி வையுங்கள்.

• புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வையுங்கள்.

• குக்கரில் நெய், எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காயை தாளித்து பின்னர் வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

• பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி தயிர், எலுமிச்சம் பழச்சாறு சேருங்கள்.

• தயிர் நன்கு கொதித்து எண்ணெய் கசிந்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேருங்கள்.

• தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் போடுங்கள்.

• ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து பத்து நிமிடம் வைத்து இறக்குங்கள்.

• சூடாக பரிமாறுங்கள்.52d75ebc 93a0 4e4b 9e91 05a8abb50e9a S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button