மருத்துவ குறிப்பு

சரும நோய்க்கு சித்த மருந்துகள்

1 . கன்னத்தில் வியாதிக்குச் சூரணம்
சங்கம் வேர் 1 பிடி
வேப்பம் வேர் 1 பிடி
செங்கத்திரி வேர் 1 பிடி
அவுரி வேர் 1 பிடி
இண்டம் வேர் 1 பிடி
ஆடாதோடை வேர் 1 பிடி
கொடிவேலி வேர் 1 பிடி
கண்டங்கத்திரி வேர் 1 பிடி
ஓமம் ¼ பலம்
திப்பிலி ¼ பலம்
திப்பிலி மூலம் ¼ பலம்
சுக்கு ¼ பலம்
சீரகம் ¼ பலம்
கருஞ்சீரகம் ¼ பலம்
வாய்விளங்கம் ¼ பலம்
இரசம் 1 பலம்
இவற்றை எரிமுட்டையில் புடமிடவும்.

கந்தகம் 1 வாரகன் பாலில் சுத்தி செய்யவும்.

சாதிலிங்கம் 1 வாரகன் வெண்ணெயில் புடமிடவும்.
குக்கில்

இவற்றை எடுத்துக் கொண்டு புடம் போடவும்.
இவ்விரு மருந்துகளையும் இடித்துக் கொள்ளவும்.பின்னர்

கந்தகம், சாதிலிங்கம் இவை கலந்து கொள்ளவும்.

ஒரு வெருகடியளவு சாப்பிட்டு வர கன்னத்து வியாதி தீரும்.

2 . மேகநாதத் தைலம்
புங்கம் பட்டை
அழிஞ்சிப் பட்டை
பிராயம் பட்டை
எட்டிப் பட்டை
மாம் பட்டை
ஒதியம் பட்டை
இலுப்பைப் பட்டை
சங்கம் பட்டை
புரசம் பட்டை
சுரப் புன்னைப் பட்டை
நூற்றாண்டு வேம்பின் பட்டை
ஊழலாத்திப் பட்டை
முதிர்ந்த பூவரசன் பட்டை
நிலவிளாப்பட்டை
சிவனார் வேம்புப் பட்டை

இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு
குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்

ஆடுதீண்டாப்பாளைச் சாறு
கழற்கொடிச் சாறு
சங்கன் குப்பிச் சாறு
செருப்படைச் சாறு
கொட்டைக் கரந்தைச் சாறு
பொடுதலைச் சாறு

இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில்
வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி
சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு, சுத்தித்த சேங்கொட்டை
1 பலம் இடித்துப் போட்டு, மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில்
இறக்கி வைக்கவும்.

அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்:
கால், கை முடக்கு முதலான வாத நோய்கள்
புற்று
தோல் நோய்கள்
அரையாப்பு
நீராம்பல்
பெருவயிறு
பாண்டு
மதுமேகம் போன்றவை குணமாகும்.

பத்தியம்:
உப்பு
மொச்சை
பாசிப்பயறு
துவரை
முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம்.
15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம்.

நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை
கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர்
பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.

3 . வேப்பம்பழ சர்பத்
வேப்பம் பழச்சாறு 1 லிட்
நாட்டுச் சர்க்கரை 1 கிலோ

வேப்பம் பழ சர்பத் தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த வேப்பம் பழங்களைச்
சேகரித்து தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பின்பு சுத்தம் செய்த பழங்கைப்
பிழிந்து கொட்டை, தோல் முதலியவற்றை நீக்க வேண்டும். பழச்சாற்றுடன் நாட்டு
சர்க்கரையைச் சேர்த்து ஒரு மண்சட்டியில் போட்டு அடுப்பில் இட்டு சீரான
தீயில் இட்டு காய்ச்சிச் சாறு சுண்டி இருக்கும் பதத்தில் இறக்கி வைத்துக்
கொள்ளவும். பின்பு இதனை உலர்ந்த, சுத்தமான புட்டிகளில் சேகரித்து வைத்துக்
கொண்டு பயன்படுத்த வேண்டும்.

அளவு: 1/4 டம்ளர் சர்பத்துடன் 1 டம்ளர் தண்ணீர் கலந்து 2 வேளை குடிக்கவும்.

பயன் இதனால் வயிற்றுக் கிருமிகள் வெளியாகும். உடல் சூடு தணியும். தோல் நோய் தீரும். Tinea+Alba

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button