ஆரோக்கிய உணவு

கருப்பை புற்று நோய்க்கான டயட்

கருப்பை புற்றுநோய் இருப்பின் அதிக ரத்தப்போக்கு, மாதவிலக்கு சமயத்தில் அதிக வலி, மாதவிலக்கு நின்ற பின் உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் தென்படலாம். பரம்பரையில் யாருக்காவது கருப்பை புற்றுநோய் இருந்திருந்தால் வர வாய்ப்புள்ளது.

ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் மூலம் வரலாம், சர்க்கரை அளவு அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க சாதத்தின் அளவைக் குறைத்து காய்கறிகள் அளவை அதிகரித்து சாப்பிட வேண்டும். பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம். தினமும் பழங்கள் சாப்பிடுவது முக்கியம்.

ஆவியில் வேக வைத்த உணவுகள் சாப்பிடலாம். அதிகம் புரதம் உள்ள உணவுகளை கூடுமான வரை தவிர்க்கவும். காய்கறிகளில் முட்டைக்கோஸ், காலிபிளவர், முளை கட்டிய பயறு வகை இதில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளவும்.

இவற்றில் இருக்கும் இன்டோல் திரீ கார்பினால் கேன்சரை உருவாக்கும் கிருமிகளை அழிக்கிறது. மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

ஆப்பிள், எலுமிச்சை, தக்காளி, சாத்துக்குடி ஆகியவற்றில் எதிர்ப்பு சக்தி உள்ளது. சிவப்பு குடைமிளகாயில் உள்ள பைட்டோகெமிக்கலும் புற்றுநோய் வராமல் தடுக்கும். பாதாம், பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.

அசைவ வகைகளில் மீன் மட்டும் ஆவியில் வேக வைத்து அல்லது குழம்பு செய்து சாப்பிடலாம். சத்தான, உடல் நலத்துக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் வருவதைத் தடுக்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர்.063804 781430359 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button