மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்

ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை வாங்கி வைத்து பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.

சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது. சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.

தற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. மழை வளம் குறைந்து வரும் சூழலில், குறைந்த நீர் தேவையுள்ள சோளப்பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வது மூலம் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும். சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.

கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. சர்க்கரையைக் குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.
c6575f24 dcc5 44a9 8cf6 2e50e30d67e8 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button