24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
ba40a310 f2b9 477e a690 8b3da5816175 S secvpf
மருத்துவ குறிப்பு

பல், சொறி, சிரங்கு பிரச்சனைகளை குணமாக்கும் பிரமந்தண்டு

தமிழகமெங்கும் தரிசு நிலங்களில், ஆற்றங்கரைகளில், சாலை யோரங்களில் தானே வளரும் சிறு செடி.
வேறுபெயர்கள் குறுக்குச்செடி, மற்றும் குயோட்டிப் பூண்டு

ஆங்கிலப் பெயர் ARGEMONE MEXICANA.
தாவரக்குடும்பம் -: PAPAVERACEAE.

மருத்துவக் குணங்கள்

இதன் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும்.

இதன் இலையை அரைத்துத் தேள் கடி வாயில் வைத்துக் கட்டினால் தேள் கடி விஷம் இறங்கும்.

இலையை அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு நீர் வடியும். கரப்பான் படை குணமடையும். உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும்.

பொன்னாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை, கரிசாலை போல கண் நோய்க்கு நல்ல குணமளிக்கும். பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளிக்க 40 நாளில் கண் பார்வை மங்கல், எரிச்சல், நீர் வடிதல் குணமாகும். இதன் இலையை ஒடித்தால் பால் வரும், இந்த பாலை கண்ணில் விட கண்வலி, சதை வளருதல், சிவத்தல், அரிப்பு, கூச்சம் ஆகியன குணமாகும்.

இதன் விதையை நெருப்பிலிட்டுப் புகைத்து அப்புகை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் புழு விழும். வலி தீரும், செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்க பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் குணமடையும். சிறந்த மருந்து பற்பொடி இதுவாகும். இதன் சாம்பல் பொடி 1-2 கிராம் தேனில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும், இரு வேளை 48 நாள் சாப்பிட வேண்டும்.

50 மி.லி.பன்னீரில் ஒரு கிராம் இதன் சாம்பலைக் கரைத்து வடித்த தெளி நீரைச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தலாம். கண் எரிச்சல், வலி, சிவப்பு ஆகியவற்றிக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்த குணமாகும்.

இலை சூரணம், விதைச் சூரணம் கலந்து 3 அரிசி எடை காலை, பாலை தேனில் கொள்ள க்ஷய இருமல், நுரையீரல், சளி இருமல் தீரும்.

இதன் விதையைப் பொடித்து இலையில் சுருட்டிப் பீடி புகைப்பது போல் புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற்சொத்தை, பற்புழு ஆகியவை தீரும்.
ba40a310 f2b9 477e a690 8b3da5816175 S secvpf

Related posts

தெரிஞ்சிக்கங்க…காலையில் எழும் போது குடிக்கும் தண்ணீரால் உண்டாகும் நன்மைகள்

nathan

மார்பகப் புற்றுநோய் ஏற்பட என்ன காரணங்கள் தெரியுமா..?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

அவசியம் என்ன? குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போடவேண்டும்?

nathan

உங்களுக்கு தெரியுமா ரோஜாவின் சில இதழ்களை சாப்பிட்டா உடலில் இந்த நோயெல்லாம் தூரம் விலகும்!!

nathan

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்கள்

nathan

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வயிற்று புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகள்!

nathan

மொபைல் போன் அதிகம் பார்க்கும் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த உணவுகளை தினமும் கொடுங்கள்…

nathan

உங்களுக்கு தெரியுமா செவி திறனை பாதிக்கும் இரைச்சல்

nathan

தொல்லை தரும் வயிற்று நோய்களை போக்கும் கொத்தமல்லி

nathan