சரும பராமரிப்பு

தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சியா?

தேவையற்ற இடங்களில் அளவுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படுவது பெண்களுக்கு தீராத பிரச்சனையாகி விடுகிறது.

ஆண்களைப் போலவே சில பெண்களுக்கு முகத்தில் மீசை, தாடி முடிகள் அடர்த்தியாக வளர்ந்து விடுகின்றன.

சில பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வதோடு கை கால்களிலும் அதிக ரோமங்கள் காணப்படுவதுண்டு.

பெண்மையின் நளினத்தை தட்டிப் பறித்து விட்டதாகக் கருதி பெண்கள் வேதனைப்படுகின்றனர்.

இம் முடிகளை எப்படியாவது அகற்றினால்தான் நிம்மதி என்று அழகு நிலையங்களுக்குச் சென்றோ அல்லது தோல் நிபுணரிடம் சென்றோ பல்வேறு முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

காரணங்கள் என்ன?

முளைக்கக் கூடாத இடங்களில் பெண்களுக்கு முடி முளைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பாரம்பரிய (ஜீன்ஸ்) காரணங்களால் இப்படி வளர வாய்ப்புள்ளது.

பாட்டிக்கும், அம்மாவிற்கும் முகத்தில் முடிகள் வளர்ந்திருந்தால் மகளுக்கும் பருவ காலத்தில் முகத்தில் முடிவளர்ச்சி தொடரும்.

ஆணின் ஹார்மோன் பெண்ணுக்குள் அதிகரிக்கும்போது குரல், நடை, பழக்கம், முடி வளர்ச்சி, பாலியல் வளர்ச்சி போன்ற அனைத்திலும் இதன் பாதிப்பு இருக்கும். சிறிது ஆண்மைச் சாயல் ஏற்படக்கூடும்.

இதற்கு ஆணின் ஹார்மோன் பெண்களிடம் அதிகரிப்பதே காரணம் என்ற போதிலும் அத்தகைய, அனைத்துப் பெண்களுக்கும் ஆண்களின் சுபாவம் ஏற்பட்டு விடுவதில்லை.

என்ன செய்யலாம்?

மீண்டும் முளைத்தால் மீண்டும் மழித்தல்.

ப்ளீச்சிங் செய்தல்:இதன் மூலம் முடிகளைப் பார்வைக்குத் தெரியாமல் செய்தல்- இரசாயனப் பொருட்களை உபயோகித்து முடிகளை மெல்லிய நிறமாக்குதல்.

எலக்ட்ரோலைசிஸ்: மின் சக்தியைக் கொண்டு ஒவ்வோரு முடியின் வேரினையும் (ஹேர் பாலிக்குள்) அழித்தல்- இதன் மூலம் முடி மீண்டும் வளராமல் தடுத்தல். இது எண்ணற்ற முறை சிகிச்சை செய்ய வேண்டும். மிகவும் செலவு செய்ய வேண்டிய சிகிச்சையாகும்.

லேசர் முறை: லேசர் பயன்படுத்தி தனித் தனியாக முடிகளை அழித்தல்.

இயற்கை முறை மருத்துவம்

கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

கடினமாக இருக்கும் தேனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், முகத்தில் வளரும் முடிகளை தடுக்கலாம். வேண்டுமெனில், தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து செய்யலாம்.

சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தால், அது முகத்தில் வளரும் முடிகளை அகற்றும்.

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், அது சருமத்தில் வளரும் முடியை நீக்குகிறதோ இல்லையோ, முடியின் நிறத்தை மங்க வைக்கும். ஆனால் இந்த முறையை தொடர்ந்து செய்தால், நாளடைவில் முடி வளராமல் இருக்கும்.

தினமும் மஞ்சள் தடவி குளித்து வந்தால், முடிகளின் வளர்ச்சி குறைவதோடு, முடிகளும் நீங்கிவிடும்.
gggg e1454338859350

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button