கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தல் வளர, நரை மறைய

Hair-Update-2014-From-Ombre-to-Brown-Hair-5பெண்கள் எந்த வயதாக இருந்தாலும் நீண்ட, அடர்த்தியான, கருகரு கூந்தலையே விரும்புவார்கள். சிலருக்கு இயற்கையிலேயே கூந்தல் அழகாக அமைந்து விடுகிறது. சில பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருக்காது. இதனால் அவர்கள் சவுரிமுடியை தனது கூந்தலுடன் இணைத்து பின்னிக்கொள்கின்றனர். சிலருக்கு தலை வாரும்போது சீப்பில் முடி உதிர்ந்து வரும். குட்டையான கூந்தலை உடையவர்கள் தங்கள் கூந்தல் நீண்டு வளர வேண்டும் என்பதற்காக பலவகை கூந்தல் தைலங்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் சிலர் இருக்கும் கூந்தலையும் இழந்துள்ளனர். சரி ஆயுர்வேத முறையில் கூறியுள்ளதை பார்ப்போம்.

* கூந்தல் உதிர்வது நின்று, கூந்தல் அடர்த்தியாக வளர நெல்லிக்காய் விதையை இடித்து தூள் செய்து அதே அளவு ஆலமரத்து விழுதின் நுனிபாகத்தை காயவைத்து இடித்த தூளை, ஒரு சுத்தமான வாணலியில் போட்டு, அதில் இரண்டு அழாக்களவு தேங்காய் எண்ணையை விட்டு மருந்துச் சரக்கு சிவந்து வரும் சமயம் இறக்கி ஆறவைத்து, பாட்டிலில் விட்டு வைத்துக் கொண்டு தலைவாரும் போது தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் நன்றாக வளரும். முடி உதிர்வதும் நிற்கும். இதே காலகட்டத்தில், திரிபலாப் பொடியில் அரைத் தேக்கரண்டி எடுத்து, அதே அளவு தேன் சேர்த்து காலை, மாலை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* முடியில் தேய்க்க தேவையான நல்லெண் ணையை எடுத்து ஒரு பெரிய கரண்டியில் விட்டு, மருவு என்னும் வாசனைத் தழையில் 5 கிராம் கிள்ளி போட வேண்டும். எண்ணையை அடுப்பில் காய்ச்ச வேண்டும். மருவு சிவந்து வரும் சமயம் கரண்டியை இறக்கி சற்று ஆறியவுடன் ஒரு எலுமிச்சை   பழத்தை அதில் பிழிந்து நன்றாக கலக்கி தலை ரோமக்கால் வரை பாயும்படி தேய்த்து கால்மணி நேரம் கழித்து, முடக்கொத்தான் இலையை மைபோல   அரைத்து தலையில் தேய்த்து முழுக வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு நாள் வீதம் தொடர்ந்து ஏழு நாள் தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று விடும். கூந்தல் அடர்த்தியாக வளரும். ஒரு சில ஆண் பிள்ளைகளுக்கும் தலை வாரும் போது முடி உதிர்ந்து நாளாவட்டத்தில் தலை   வழுக்கையாகும். அவர்களும் இம் முறையை பின்பற்றலாம்.

* நரை மறைவதற்கு நன்றாக பழுத்த நெல்லிக்கனியை இடித்து இரண்டு அழாக்கு நெய்யை அதில் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். கொதித்து நீர் சுண்ட வண்டல் சிவந்து வரும்போது இறக்கி ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து காலையில் ரோமக் கால்களில் இறங்கும் அளவிற்கு இந்த நெய்யை தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த விதமாக 40 நாள் செய்து வந்தால் நரை மாறி ரோமம் கருப்பாக தோற்றமளிக்கும்.

* சில இளைஞர்களுக்கு வாலிப வயதிலேயே தலையில் ரோமம் வெளுக்க ஆரம்பிக்கும். இந்த நிலை ஏற்பட்ட உடனேயே நன்றாக பழுத்த   நெல்லிக்கனி தேவையான அளவும், அதே அளவு எலுமிச்சை இலை இவையிரண்டையும் மைபோல அரைத்து நரை தோன்றிய இடத்தில் நன்றாக தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் தலைமுழுகி வர இளநரை மாறும்.

* தலையில் புழுவெட்டு ஏற்பட்டு வழுக்கை பெரிதாகி வந்தால், ஊட்டியில் விற்பனையாகும் சிட்டோரியா ஆயிலை குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர சில நாட்களில் முடி வளரும்.

பேன் பொடுகு நீங்க

தலையில் உள்ள பேன் பொடுகு நீங்க ஒரு டம்ளர் பாசிப்பயிறை எலுமிச்சை சாறு விட்டு மைபோல அரைத்து எடுத்து மூக்கு பொடித்தூள் நாலில் ஒரு பங்கு சேர்த்து குழப்பி தலையில் தடவி அரை மணிநேரம் கழித்து தலைகுளிக்க வேண்டும். இவ்விதமாக 3 நாட்கள் செய்ய பேன், பொடுகு ஒழிந்து   கூந்தல் சுத்தமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button