சைவம்

இட்லி சாம்பார்

தேவையான பொருள்கள் –
பாசிப்பருப்பு – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
வெந்தயத் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – சிறிது
தாளிக்க –
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை – சிறிது

செய்முறை –
ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணிர், பெருங்காயத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின் ஒரு வாணலியில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
பின்னர் 1 1/2 கப் தண்ணிர் சேர்த்து மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், வெந்தயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
கடைசியாக வெந்த பருப்பை போட வேண்டும் .கொதித்து 2 நிமிடம் ஆனதும் மல்லித்தழையைப் போட்டு இறக்கி விடவும்.
idli sambar2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button