முகப்பருமுகப் பராமரிப்பு

முகப்பருவை போக்கும் வில்வம்

பெண்களுக்கு தேவையான சில மருந்துகள், குறிப்பாக பெண்கள் தங்களது மேனி எழிலை மெருகூட்டிக் கொள்வதற்கான மருந்துகளை எவ்வாறு தயார் செய்யலாம். தோலில் ஏற்படுகிற நமைச்சல், அரிப்பு போன்ற சொரியாசிஸ் என்று சொல்லப்படுகிற பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவ குறிப்புகளையும் நாம் தற்போது காணலாம். இளம் பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்னையான முகப்பருக்கான மேற்பூச்சு மருந்து ஒன்றை தயார் செய்யலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் வில்வம் பழம், எலுமிச்சை, தேன். வில்வம் பழத்தை உடைத்து அதன் உள்பகுதியில் உள்ள சதைப்பகுதியை பசையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு வில்வ பசையை எடுத்து அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிய வேண்டும். அதே போல் இந்த கலவையுடன் சில துளிகள் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை பருக்கள் மீது வைத்து வந்தால் பருக்கள் நீங்கி தோல் அழகு பெறும்.

மேலும் பருக்களால் உண்டாகும் கருமை நிறம் படியாமலும் இது பாதுகாக்கும். பெரும்பாலும் மலச்சிக்கல் காரணமாகவே முகப்பருக்கள் தோன்ற வாய்ப்புள்ளது. அதே போன்று சரியான முறையில் உடலுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்ற ஊட்டச்சத்துகள் எடுத்துக் கொள்ளாத போதும் பருக்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஹார்மோன் சுரப்பிகளில் குறைபாடுகள் இருந்தாலும் பருக்கள் தோன்றும். அதே போல் பெண்கள் அதிகமான எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னையான பாத வெடிப்புக்கான மேற்பூச்சு மருந்தை தயார் செய்யலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் விளக்கெண்ணை, பூசு மஞ்சள் பொடி. மிகவும் எளிய முறையாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்த மருந்து விளங்குகிறது. இரவு நேரத்தில் படுக்க போகும் முன் சிறிதளவு விளக்கெண்ணையில் பூசு மஞ்சளை கலக்கி அதை பாத வெடிப்புகளில் தடவி வர, பாத வெடிப்புகள் குணமாகும். இதை தொடர்ந்து பயன்படுத்துவால் மிகுந்த பயனை உணரலாம். இதனால் குதிகால்களில் ஏற்படும் வலியும் குறையும். அதே போல் பெண்களின் முகத்தில் தோன்றும் தேவையில்லாத ரோமங்களை இயற்கையாக அகற்றுவதை பற்றி பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள். குப்பை மேனி, வேப்பிலை, பூசு மஞ்சள், அரிசி அல்லது பாசிப்பயறு. இந்த நான்கையும் சேர்த்து ஒரு பசையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் தேவையில்லாத ரோமங்கள் இருக்கும் இடங்களில் ஒரு பற்றுபோல் பூச வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் காய விட்டு பின்னர் அதை அப்படியே முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை பயன்படுத்தும் போது நல்ல பயனை உணரலாம்.

இது படிப்படியாக தேவையில்லாத ரோமங்களை அகற்ற தொடங்குவதை பார்க்கலாம். அதே போல் தோலில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்யும் மேற்பூச்சு மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள், சோற்று கற்றாழையின் உள்பகுதியில் இருக்கும் சதை பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். விளக்கெண்ணை. விளக்கெண்ணையுடன் சம அளவு சோற்று கற்றாழை சாறை சேர்க்க வேண்டும்.

இதை சிறு தீயில் வைத்து தைலமாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை நன்றாக பொரிந்து வரும் வேளையில் நெருப்பை நிறுத்தி இறக்க வேண்டும். பின்னர் இதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த தைலத்தை தோலில் சுருக்கங்கள் இருக்கும் இடத்தில், குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு பெண்களின் அடி வயிற்றில் உருவாகும் சுருக்க தடங்களில் இதை பூசி வருவதால் படிப்படியாக தோல் சுருக்கம் மறைவதை காணலாம்.DPnpsqMU8AAV5Fx

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button